இந்தியா

ம.பி.யில் வெள்ளப்பெருக்கு: சேதங்களை நேரில் பார்வையிட்ட முதல்வர்

30th Aug 2020 03:02 PM

ADVERTISEMENT

மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் நேரில் சென்று பார்வையிட்டார்.

பருவமழை காரணமாக வடமாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

ஹோஷங்காபாத், செஹோர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவிலான மக்கள் தங்களது வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காக ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹோஷங்காபாத் மற்றும் செஹோர் பகுதிகளை முதல்வர் சிவராஜ் சிங் செளகான் நேரில் சென்று பார்வையிட்டார். ஹெலிகாப்டர் மூலம் நர்மா நதிக்கரை வெள்ள பாதிப்புகளை சுமார் ஒன்றரை மணிநேரம் பார்வையிட்டார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT