இந்தியாவில் கரோனாவால் குணமடைபவர்களின் விகிதத்தில் தலைநகர் தில்லி முன்னணியில் உள்ளது.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நாளொன்றுக்கு கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 60 ஆயிரத்தைக் கடந்து சென்றுவருகிறது. இந்நிலையில் தலைநகர் புதுதில்லியில் கரோனாவால் குணமடைவதன் விகிதம் அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனா பாதிப்பிலிருந்து 90 சதவிகிதத்தினர் குணமடைந்த முதல் மாநிலம் எனும் பெருமையை புதுதில்லி பெற்றுள்ளது. புதுதில்லியில் கரோனாவால் குணமடந்தோர் விகிதம் 90.04% ஆக உள்ளது. கரோனா தொற்றால் 1 லட்சத்து 64 ஆயிரத்து 71 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 743 நோயாளிகள் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனா சிகிச்சையில் உள்ள 11 ஆயிரத்து 998 பேரில் 4 அயிரத்து 505 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.