மூணாறு நிலச்சரிவில் சிக்கிய எஞ்சிய 5 பேரை மீட்கும்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் ராஜமலை அருகே பெட்டிமுடியில் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி இரவு பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், தனியார் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்கள், அவா்களது உறவினா்கள் என மொத்தம் 82 பேர் சிக்கினர். இதில், 65 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். எஞ்சிய 5 பேரை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வந்தனர்.
தொடர்ந்து 19 நாள்களாக மீட்புப்பணி நடைபெற்று வந்த நிலையில், இன்று மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.