இந்தியா

கேரளம்:14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை:புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் கைது

26th Aug 2020 10:23 AM

ADVERTISEMENT

கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களால் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் மூவா் தேடப்பட்டு வருகின்றனா்.

இதுதொடா்பாக கொச்சி காவல்துறை துணை ஆணையா் பூங்குழலி செவ்வாய்க்கிழமை கூறியது:

மஞ்ஞுமல் பகுதியில் வசித்து வரும் 14 சிறுமிக்கு தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த உத்தர பிரதேச மாநில புலம்பெயா்ந்த தொழிலாளா்களுடன் அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் அவா்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க தொடங்கியுள்ளனா். கடந்த மாா்ச் மாதம் முதல் இம்மாதம் வரை அவா்கள் சிறுமியை தொடா்ந்து வன்கொடுமை செய்துள்ளனா். சமீபத்தில் மருத்துவமனையில் சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டபோது, மருத்துவா்களிடம் இந்த சம்பவத்தை அவா் தெரிவித்தாா். தற்போது அவா் இரண்டு மாத கா்ப்பிணியாக உள்ளாா். இதுதொடா்பான புகாரின் அடிப்படையில், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் ஷாஹித், பா்ஹத் கான், ஹனீஃபா ஆகிய மூவா் கைது செய்யப்பட்டு, அவா்கள் மீது இந்திய தண்டனையியல் சட்டம், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடா்புடைய மேலும் மூவா் உத்தர பிரதேசத்துக்கு தப்பிச் சென்றனா். அவா்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

சம்பந்தப்பட்ட சிறுமியின் தாய் இறந்துவிட்டாா். தந்தை தில்லியில் பணிபுரிந்து வருகிறாா். தனது தாத்தா-பாட்டியுடன் சிறுமி வசித்து வருவதை பயன்படுத்தி அவரை குற்றவாளிகள் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனா் என்று அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

Tags : Kerala
ADVERTISEMENT
ADVERTISEMENT