மேற்கு வங்க மாநிலம் பஹரம்பூர் பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் ரிக்டர் அலகு 4.1 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், மேற்கு வங்க மாநிலத்தில் பஹாரம்பூருக்கு தென்கிழக்கில் 30 கி.மீ வரையிலான தூரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் குறித்து எந்த தகவல் வெளியாகவில்லை.