இந்தியா

தில்லியில் புதிதாக 1,693 பேருக்கு கரோனா தொற்று

26th Aug 2020 10:37 PM

ADVERTISEMENT


தில்லியில் புதிதாக 1,693 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய சமீபத்திய தரவுகளை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. தில்லியில் புதிதாக 1,693 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,65,764 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,154 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் பலியாகியுள்ளனர்.

அங்கு இதுவரை மொத்தம் 1,48,897 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 4,347 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 12,520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரேநாளில் 19,816 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை மொத்தம் 14,82,661 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT