இந்தியா

மேற்குவங்கத்தில் செப். 20 வரை ஊரடங்கு நீட்டிப்பு: மம்தா பானர்ஜி

26th Aug 2020 06:22 PM

ADVERTISEMENT

மேற்குவங்கத்தில் செப்டம்பர் 20-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றால் கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், பரிசோதனைகளை அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை அடுத்து பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் கரோனாவின் தாக்கல் குறையாததால், ஒருசில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது.

அந்தவகையில் மேற்குவங்கத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இம்மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த மாதம் 20-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ஊரடங்கின்போது முன்பு அறிவிக்கப்பட்ட தளர்வுகள் தற்போதும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஊரடங்கின்போது செப்டர்மர் 7, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT