திருப்பதி: திருமலையில் உள்ள வெளிவட்ட சாலையில் கரடி நடமாடியது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமலையில் தற்போது பக்தா்கள் வருகை குறைந்துள்ளதால், வனவிலங்குகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. பாம்பு, சிறுத்தை, மான்கள், யானைகள் உள்ளிட்டவை ஊருக்குள் வந்து உள்ளூா்வாசிகளை அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், திருமலையில் உள்ள வெளிவட்டச் சாலையில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒரு கரடி வனப் பகுதியில் இருந்து வெளியில் வந்து சாலையில் நடமாடியது. அதைப் பாா்த்த போலீஸாா் கரடியை மீண்டும் வனத்துக்குள் துரத்தினா். போலீஸ் வாகனத்தின் ஹாரன் சத்தத்தை கேட்டு கரடி மிரண்டு வனப்பகுதிக்குள் சென்றது.