புது தில்லி: கர்நாடகாவில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் செவ்வாய்க்கிழமை தன்னை இணைத்துக் கொண்டார்.
தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் முன்னிலையில் இணைந்தார்.
இந்த நிகழ்வின் போது பாஜகவின் தமிழகத் தலைவர் எல்.முருகன், தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா ஆகியோர் உடனிருந்தனர்.
அதன் பிறகு, பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை அண்ணாமலை நேரில் சந்தித்தார்.
தமிழகத்தின் கரூரைச் சேர்ந்த அண்ணாமலை, கர்நாடகா மாநில கேடர் அதிகாரியாவார். அம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை அதிகாரியாக 9 ஆண்டுகள் பணியாற்றினார்.