இந்தியா

ஒடிசாவில் குடியிருப்புப் பகுதியில் புகுந்து கரடி தாக்கியதில் ஒருவர் காயம்

21st Aug 2020 06:41 PM

ADVERTISEMENT

ஒடிசாவில் குடியிருப்புப் பகுதியில் புகுந்து கரடி தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார். 

ஒடிசா மாநிலம், கலஹந்தி மாவட்டத்தில் உள்ள பவானிபட்னாவின் குடியிருப்புப் பகுதியில் இன்று கரடி ஒன்று நுழைந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். அப்போது அந்த வழியாக வந்த நபரை கரடி திடீரென தாக்கியது. 

இதில் அந்த நபர் கீழே விழுந்தார். உடனே அங்கிருந்தவர்களில் இருவர் தடியைக் கொண்டு கரடியை சரமாரியாக தாக்கி அந்த நபரை மீட்டனர். இந்த சம்பவத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

தகவல் அறிந்து அங்கு விரைந்த வனத்துறையினர் கரடியை பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இதேபோன்று ஒரு சம்பவம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் இங்கு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT

Tags : odisha
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT