இந்தியா

விவாகரத்திற்காக இஸ்லாமியப் பெண் கூறிய விநோத காரணம்!

21st Aug 2020 04:25 PM

ADVERTISEMENT

 

சம்பல்: உத்தரபிரதேசத்தில் கணவனிடமிருந்து விவாகரத்திற்காக இஸ்லாமியப் பெண் ஒருவர் கூறிய விநோத காரணம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் கணவனிடமிருந்து விவாகரத்து கோரி இஸ்லாமியர்களுக்கான ஷாரியா நீதிமன்றத்தை அணுகினார். அதற்கு அவர் கூறிய காரணம்தான் நீதிமன்றத்தாரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அவர் கூறுகையில், ‘எனது கணவருடைய அன்பு என்னை மூச்சுத்திணறச் செய்கிறது. அவர் என்னிடம் கோபமாகப் பேசுவதில்லை; என்னை எந்த ஒரு விஷயத்திற்கும் வருத்தமடையச் செய்வதில்லை. அவர் எனக்காக சமைத்துக் கொடுப்பதுடன், எனக்கு வீட்டு வேலைகளிலும் உதவுகிறார். நான் எப்போது சிறு தவறு செய்தாலும் அவர் என்னை மன்னித்து விடுகிறார். நான் அவரோடு சண்டை போட விரும்புகிறேன்.  எல்லா விஷயத்திற்கும் கணவர் ஒத்துக்கொள்ளும் ஒரு வாழ்க்கையை நான் விரும்பவில்லை.’ என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த ஷாரியா நீதிமன்றம் மனுவினை தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து உள்ளூர் பஞ்சாயத்தை அந்த இளம்பெண் அணுகியபோதும் அவர்களும் கை விரித்து விட்டனர்.

இந்நிலையில் அந்தப் பெண்ணின் கணவன் தான் அவரை மிகவும் விரும்புவதாகவும், அவளை எப்போதும் சந்தோசமாக வைத்திருக்கவே ஆசைப்படுவதாகவும், எனவே அவளது மனுவினை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார். இதையடுத்து விவகாரத்தை பேசித்தீர்த்துக் கொள்ளும்படி ஷாரியா நீதிமன்றம் இருவருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT