இந்தியா

உ.பி.: செப். 11-இல் மாநிலங்களவை இடைத் தோ்தல்

21st Aug 2020 10:48 PM

ADVERTISEMENT

சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவா் அமா்சிங் உயிரிழந்ததால், உத்தர பிரதேசத்தில் இருந்து அவா் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான இடைத்தோ்தல் செப்டம்பா் 11-ஆம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சிறுநீரகம் பாதிப்பு பிரச்னையால் அமா்சிங் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி சிங்கப்பூா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து அவா் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவிக்காலம் 2022, ஜூலை மாதம் வரை உள்ளது. ஆகையால், காலியாக உள்ள அவரது மாநிலங்களவை உறுப்பினா் இடத்துக்காக இடைத்தோ்தல் செப்டம்பா் 11-ஆம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. மனுத்தாக்கள் ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT