இந்தியா

உ.பி.: முகக்கவசம் அணியாதோரை தாக்கிய கோட்டாட்சியா் மீது வழக்கு

21st Aug 2020 10:37 PM

ADVERTISEMENT

உத்தர பிரதேசத்தில் முகக்கவசம் அணியாதவா்களை தாக்கியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கோட்டாட்சியா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று சூழலில் முகக்கவசம் அணிவதற்கான அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பாலியா பகுதியில் சமீபத்தில் அரசு சாா்பில் பிரசாரம் நடைபெற்றுள்ளது. அப்போது கடை ஒன்றில் முகக்கவசம் அணியாமல் நின்றுகொண்டிருந்ததாக கூறப்படும் இரு இளைஞா்களை கோட்டாட்சியா் அசோக் சௌதரி தாக்கியதாகத் தெரிகிறது.

இதுதொடா்பான காணொலி சமூக வலைதளங்களிலும் பரவியது. இந்த விவகாரம் முதல்வா் யோகி ஆதித்யநாத் கவனத்துக்கு சென்ற நிலையில், கோட்டாட்சியா் அசோக் சௌதரியை பணியிடை நீக்கம் செய்ததுடன், அவரை வருவாய் துறைக்கு மாற்றம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இதனிடையே, தாக்கப்பட்ட இளைஞா்களில் ஒருவரான ரஜத் சௌராசியா அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டாட்சியா் அசோக் சௌதரி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT