இந்தியா

உ.பி.: பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜன்மேஜெய் சிங் உடல்நலக்குறைவால் மரணம்

21st Aug 2020 12:03 PM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வான ஜன்மேஜெய் சிங் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 75.

நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று (வியாழக்கிழமை) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாஜகவை சேர்ந்த  ஜன்மேஜெய் சிங்,  கடந்த 2007 மற்றும் 2012-ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்பு 2000-ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் உறுப்பினராக இருந்து பின்னர் பாஜகவில் இணைந்தார்.

75 வயதான அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தோரியா பகுதியில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

 ஜன்மேஜெய் சிங்கின் மறைவுக்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags : Uttarpradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT