இந்தியா

ஒரு லட்சத்தை நெருங்குகிறது பாதிப்பு: தெலங்கானாவில் இன்று 1,967 பேருக்குத் தொற்று

21st Aug 2020 11:59 AM

ADVERTISEMENT

 

தெலங்கானாவில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி இன்று மேலும் 1,967 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்நிலையில், . தெலங்கானாவில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. 

மேலும் ஒரே நாளில் எட்டு பேர் பலியாகியுள்ளதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 737 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய கரோனா பாதிப்பு 1,967 ஆக உள்ள நிலையில், மாநிலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 99,391 ஆக உள்ளது. 

ADVERTISEMENT

தொற்று நோயிலிருந்து இதுவரை 76,967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 21,687 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

ஆகஸ்ட் 20 தேதி மட்டும் 26,767 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 8,48,078 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. 
 

Tags : Coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT