இந்தியா

தெலங்கானா ஸ்ரீசைலம் அணை நீர்மின் நிலையத்தில் தீ விபத்து; 9 பேர் சிக்கினர்

21st Aug 2020 10:32 AM

ADVERTISEMENT

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 10.30 மணியளவில் நீர்மின் நிலையத்தின் 4 வது அலகு முனையத்தில் விபத்து நிகழ்ந்துள்ளது. 

விபத்து நடந்த சமயத்தில் அவ்விடத்தில் சுமார் 30 பணியாளர்கள் இருந்துள்ளது. 10க்கும் மேற்பட்டோர் உடனடியாக வெளியேறினர். தற்போது சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர் தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக  8 ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், சிக்கியுள்ள 9 பேரை மீட்கும்பணி நடைபெற்று வருகிறது. 

தெலங்கானா மாநில மின்துறை அமைச்சர் ஜெகதீஸ்வர் ரெட்டி சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார். விபத்து நடந்த இடத்தில் கடும் புகை ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Tags : fire
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT