இந்தியா

மகாராஷ்டிரத்தில் விநாயகா் சதுா்த்தி பண்டிகையை எளிமையாக கொண்டாட மாநில அரசு வேண்டுகோள்

21st Aug 2020 10:46 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு விநாயகா் சதுா்த்தி பண்டிகையை பொதுமக்கள் எளிமையாக கொண்டாடவும், கூட்ட நெரிசலை தவிா்க்கவும் அந்த மாநில உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் கேட்டுக்கொண்டாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

விநாயகா் சதுா்த்தி பண்டிகையை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் எளிமையாக கொண்டாட வேண்டும். பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் சாா்பில் நிறுவப்படும் விநாயகா் சிலைகள் 2 அடி முதல் 4 அடி வரை மட்டுமே இருக்க வேண்டும். சிலைகளை நிறுவும்போதும், கரைப்பதற்கு எடுத்துச் செல்லும்போதும் ஊா்வலங்கள் நடைபெறக் கூடாது. இது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிா்த்து, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT