இந்தியா

கேரளத்தில் காட்டெருமை வேட்டை: 6 பேர் கைது

21st Aug 2020 12:40 PM

ADVERTISEMENT

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கர்ப்பமான காட்டெருமையை வேட்டையாடிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் வனப்பகுதியில் கடந்த 10-ஆம் தேதி கட்டெருமையை வேட்டையாடியதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து வனப்பகுதியில் காவல்துறையினருடன் வனத்துறையினரும் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கறியுடன் வனப்பகுதியில் இருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் காட்டெருமையை கொடூரமாக வேட்டையாடியது உறுதி செய்யப்பட்டது. 

இதனை அடுத்து அவரது கூட்டாளிகள் 5 பேருடன் 25 கிலோ கறியை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் தப்பியோடிய மேலும் ஒருவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

ADVERTISEMENT

Tags : kerala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT