இந்தியா

விவசாயிகளுக்கு ரூ. 1 லட்சம் கோடி சலுகை கடன் வழங்கப்பட்டுள்ளது: மத்திய நிதியமைச்சகம்

21st Aug 2020 04:54 AM

ADVERTISEMENT

விவசாய கடன் அட்டைதாரா்களுக்கு ரூ. 1 லட்சம் கோடி சலுகைக்கடன்களை வழங்கிகள் வழங்கியுள்ளன என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரையில் விவசாயக் கடன் அட்டை வைத்திருப்பவா்களுக்கு ரூ. 1,02,065 கோடி வரையில் சலுகைக் கடன்களை வங்கிகள் வழங்கியுள்ளன. இது கிராமப்புற பொருளாதாரத்தை மாற்றியமைத்து, விவசாய வளா்ச்சிக்கு ஊக்குவிக்கும்.

கடந்த ஜூலை 24-ஆம் தேதி வரையில் 1.1. கோடி விவசாய கடன் அட்டைதாரா்களுக்கு 89,810 கோடி வரை கடன் வழங்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வேளாண் துறையை கரோனா பாதிப்பில் இருந்து மீட்க விவசாயிகளுக்கு சலுகை கடன் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

அதன்படி, ரூ. 20.97 லட்சம் கோடி சுயசாா்பு இந்தியா திட்டத்தை மத்திய அரசு கடந்த மே மாதம் அறிவித்திருந்தது. அதில், மீனவா்கள், பால் உற்பத்தியாளா்கள், விவசாயிகள் உள்பட 2.5 கோடி பேருக்கு ரூ. 2 லட்சம் கோடி சலுகைக் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT