இந்தியா

விநாயகர் சதுர்த்தி: குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

21st Aug 2020 08:18 PM

ADVERTISEMENT

விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகிகோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் சக குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
விநாயகர் பிறந்தநாளாகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திப் பண்டிகை, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் அரவணைக்கும் மக்களின் உற்சாகம், மகிழ்ச்சி, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் வெளிப்பாடாகும்.
தற்போது கொவைட்-19 தொற்றுநோயால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்கிறோம். இந்தத் தொற்றுநோயை விரைவாக சமாளித்து நாம் அனைவரும் மகிழ்ச்சியான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ, விநாயகர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறேன், பிரார்த்தனை செய்கிறேன்.”, என்று குடியரசுத் தலைவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், புனிதமான ‘’கணேஷ் சதுர்த்தி’’’யை முன்னிட்டு நமது நாட்டு மக்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடவுளர்கள் சிவபெருமான், பார்வதி ஆகியோரின் இளைய மகன் என்ற நம்பிக்கைக்கு உகந்த கணேச பகவான், ஞானம், முன்னேற்றம், நல்ல
அதிர்ஷ்டம் ஆகியவற்றின் சின்னமாக விளங்குகிறார். நாம் கணேச பகவானை வழிபட்டு, புதியவற்றைத் தொடங்குவதற்கு முன்பாக அதில் இருக்கும் தடங்கல்களை அகற்றி அருளாசி வழங்குமாறு கேட்டுக்கொள்வோம்.
கணேச சதுர்த்தி என்பது பகவான் கணேசரின் பிறப்பைக் குறிக்கும் 10 நாள் பண்டிகையாகும். இந்த விழாக்கள் பக்தர்களின் கூட்டம் மற்றும் ஊர்வலங்களால் களைகட்டிக் காணப்படும். ஒவ்வொரு ஆண்டும் விநாயகரின் பல்வேறு விதமான அழகிய சிலைகளை மக்கள் தங்கள் வீடுகளுக்குக் கொண்டு வந்து வைத்து, பக்தி சிரத்தையுடன் வழிபடுவார்கள். 10-வது நாளில் கணேசர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். கணேசர் கைலாயத்துக்கு பயணம் செல்வதை இது குறிக்கும். இத்துடன் இந்த விழா நிறைவு பெறும்.
பெரும் கூட்டமும் , பிரம்மாண்ட ஊர்வலங்களும் விநாயகர் சதுர்த்தி விழாவின் அடையாளமாக இருந்த போதிலும், இந்த ஆண்டு, கொவைட்-19 பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, கொண்டாட்டங்களை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும். கொவைட்-19 சமூக இடைவெளியையும், விதிமுறைகளையும் பின்பற்றி, விழாவைக் கொண்டாடும் வேளையில், சுகாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் பராமரிப்போம் என எனது சக குடிமக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த கணேச சதுர்த்தி விழா, நம் நாட்டில் அமைதி, நல்லிணக்கம், முன்னேற்றத்தை அளிப்பதாகுக. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT