இந்தியா

மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் திரிபுரா அரசின் புதிய முயற்சி

21st Aug 2020 06:37 PM

ADVERTISEMENT

திரிபுராவில் பள்ளி மாணவர்களுக்காக அவர்கள் இருப்பிடத்திற்கு அருகே தற்காலிக வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. முதல் நாள் வகுப்பான இன்று (வெள்ளிக் கிழமை) ஒருலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கல்வி பயின்றனர்.

கரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் மூடப்பட்டு 5 மாதங்களுக்கு மேலானதால், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு திரிபுராவில் மாணவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி அருகே தற்காலிக வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

இதற்கு மாநில கல்வித்துறையும் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக பேசிய கல்வித்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத், ''முதல்நாளான இன்று 1.25 லட்சம் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

இந்த முறையின்மூலம் ஒரு ஆசிரியர் 5 மாணவர்களுக்கு மட்டுமே பாடங்களை கற்பிப்பார். மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும். 

ADVERTISEMENT

3 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கல்வி நிலையத்தில் உள்ள மைதானத்திற்கோ அல்லது கல்வி நிலையம் அருகே உள்ள திறந்தவெளி பகுதிக்கோ வந்து பயில வேண்டும்.

கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் எதிர்காலம் குறித்து அனைத்து கட்சியினருடன் கூட்டம் நடத்தி, மாணவர்களுக்கு தற்காலிக வகுப்பு எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

அரசு சார்பில் தொலைக்காட்சி மூலமும், ஆன்லைன் வகுப்புகள் மூலமும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் மாநிலத்தில் பெரும்பாலான மாணவர்களின் இல்லத்தில் தொலைக்காட்சி மற்றும் செல்போன் இல்லை என தெரியவந்தது. இதனால் இந்த முறை மூலம் மாணவர்களுக்கு கல்வி வழங்கப்பட்டு வருகிறது'' இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT