இந்தியா

வீடுகளிலேயே ஓணத்தைக் கொண்டாட கேரள முதல்வர் வேண்டுகோள்

21st Aug 2020 12:32 PM

ADVERTISEMENT

கரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு ஓணம் பண்டிகையை வீடுகளிலேயே கொண்டாட கேரள மக்களுக்கு அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா அச்சம் காரணமாக பொதுஇடங்களில் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்ப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் முதன்முதலில் கரோனா பாதிப்பு பதிவான கேரளத்தில் நடப்பாண்டு நடைபெற உள்ள ஓணம் பண்டிகையை பொதுமக்கள் வீடுகளிலேயெ கொண்டாடுமாறு முதல்வர் பினராய் விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"தற்போதைய கரோனா சூழ்நிலையில் இருந்து மீள பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் நடப்பாண்டு ஓணம் பண்டிகையை வீடுகளிலேயே கொண்டாட கேட்டுக்கொள்கிறேன்.” என தனது செய்திக்குறிப்பில் கேரள முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

"கரோனா பாதிப்பு எண்ணிக்கையைக் குறைத்து இறப்பு விகிதத்தை குறைப்பதே இதன் நோக்கம்" என்று மேலும் அவர் கூறினார்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT