இந்தியா

நீட், ஜேஇஇ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்: மத்திய அரசு

21st Aug 2020 07:00 PM

ADVERTISEMENT

நீட், ஜேஇஇ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் அமித் காரே தெரிவித்துள்ளார். 

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், தற்போது பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தேர்வுகளை ரத்து செய்ய/ ஒத்தி வைக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வு பயத்தால் கோவையைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பேரிடர் காலத்தில் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர். 

ADVERTISEMENT

இதையடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் அமித் காரே, 'நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை. திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும். உச்ச நீதிமன்றமும் இதுதொடர்பான வழக்கில் தெளிவான தீர்ப்பினை வழங்கியுள்ளது' என்று கூறியுள்ளார். 

Tags : NEET
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT