இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 303 காவலர்களுக்கு கரோனா: மேலும் 5 பேர் பலி

21st Aug 2020 12:21 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் புதிதாக 303 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 5 காவலர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதில் அதிக அளவாக கரோனா தொற்று பதிவாகும் மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. 

கரோனா தொற்றுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் போன்ற முன்களப் பணியாளர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் புதிதாக 303 காவலர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 13,180-ஆக அதிகரித்துள்ளது. 

இதில் 2,389 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 10,655  காவலர்கள் குணம்டைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ADVERTISEMENT

புதிதாக 5 காவலர்கள் கரோனா பாதிப்பிற்கு உயிரிழந்தனர். இதனால் கரோனாவால் உயிரிழந்த மொத்த காவலர்களின் எண்ணிக்கை 136-ஆக அதிகரித்துள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT