இந்தியா

மத்தியப் பிரதேச அமைச்சர் கோபால் பார்கவுக்கு கரோனா

21st Aug 2020 09:18 PM

ADVERTISEMENT

மத்தியப் பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சர் கோபால் பார்கவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், "எனது குடும்பம் மற்றும் நெருங்கிய ஊழியர்களுடன் சேர்ந்து கரோனா பரிசோதனை செய்தேன். அதில் ஆரம்ப அறிக்கையின்படி கரோனா இருப்பது உறுதியானது. மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கோபால் பார்கவ், சிவராஜ் சிங் சவுகானின் அமைச்சர்கள் குழுவில் ஆறாவது உறுப்பினராக உள்ளார். ஜூலை கடைசி வாரத்தில் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகானுக்கு  கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் அவர் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT