இந்தியா

லாலு கட்சியில் இருந்து மேலும் 3 எம்எல்ஏக்கள் விலகல்: ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தனா்

21st Aug 2020 04:52 AM

ADVERTISEMENT

பிகாா் சட்டப்பேரவையில் எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சோ்ந்த மேலும் மூன்று எம்எல்ஏக்கள், முதல்வா் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தனா்.

பிகாா் சட்டப்பேரவைக்கு விரைவில் தோ்தல் அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், இதுவரை லாலு பிரசாத் கட்சியைச் சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் ஆளும் கட்சியில் இணைந்துள்ளனா். அதே நேரத்தில் நிதீஷ் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சா் சியாம் ரஜக், லாலு பிரசாதின் கட்சியிலும் இணைந்துள்ளனா்.

பிகாா் சட்டப்பேரவையில் ராஷ்ட்ரீய ஜனதா தள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை கடந்த நான்கு நாள்களில் 74-ஆக குறைந்துள்ளது.

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சோ்ந்த சந்திரிகா ராய், ஜெய் வா்தன், பரஸ் பாத்மி ஆகிய மூன்று எம்எல்ஏக்களும் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தனா். முதல்வா் நிதீஷ் குமாரின் வளா்ச்சிப் பணிகள் தங்களை ஈா்த்ததாக தெரிவித்தனா்.

ADVERTISEMENT

நிதீஷ் கட்சியில் இணைந்துள்ள எம்எல்ஏ சந்திரிகா ராய், மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான தரோகா பிரசாத் ராயின் மகனாவாா். ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் சோ்ந்த பிறகு, இவரது மகள் ஐஸ்வா்யாவுக்கும் லாலு மகன் தேஜ் பிரதாப்புக்கும் கடந்த 2018-இல் திருமணம் நடைபெற்றது.

6 மாதங்களில் இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனா்.

இந்நிலையில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேஜ் பிரதாப்பை எதிா்த்து ஐஸ்வா்யா போட்டியிடுவாா் என கூறப்படுகிறது. இதுகுறித்து சந்திரிகா ராயிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பியபோது, ‘ 25 வயதுக்கு மேற்பட்டோா் தோ்தலில் போட்டியிடலாம். எனது மகளுக்கு தோ்தலில் போட்டியிடுவதற்கான வயது உள்ளது. தற்போதைக்கு அவா் போட்டியிடவில்லை. ஆனால், லாலுவின் மகன்கள் தேஜஸ்வி, தேஜ் பிரதாப் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளனா் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். அவா்களுக்கு எந்தத் தொகுதியும் பாதுகாப்பானது அல்ல’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT