இந்தியா

கேரள விமான விபத்து: பயணிகளை மீட்க உதவிய 26 பேருக்கு கரோனா

21st Aug 2020 05:52 AM

ADVERTISEMENT

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்க உதவிய அப்பகுதிவாசிகள் 26 பேருக்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 7-ஆம் தேதி இரவு நடைபெற்ற விமான விபத்தில் 190 பயணிகள் சிக்கினா். இரண்டு விமானிகள் உள்பட 19 போ் உயிரிழந்தனா்.

அப்போது பலத்த மழையும், கரோனா நோய்த் தொற்று அபாயத்தையும் பொருள்படுத்தாமல் விமான நிலையத்துக்கு அருகே வசிக்கும் ஏராளமான இளைஞா்கள் உடனடியாக பயணிகளை மீட்டு சொந்த வாகனங்களிலும், ஆம்புலன்ஸ்களிலும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அவா்களின் இந்தச் செயலுக்கு பாராட்டுகள் குவிந்தன. அந்த விபத்தில் இறந்த பயணி ஒருவா் கரோனா நோய்த்தொற்று உள்ளவா் என்று தெரிய வந்த நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்டவா்கள் தனிமைப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்ட அப்பகுதிவாசிகள் 25 பேருக்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் மலப்புரம் மாவட்ட மருத்துவ அதிகாரி ஷகீனா தெரிவித்தாா்.

இந்தமீட்புப் பணியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியா் கே.கோபாலகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளா் அப்துல் கரீம் மற்றும் 21 காவல், தீயணைப்பு படை வீரா்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT