இந்தியா

கேரள தங்கம் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன் மறுப்பு

21st Aug 2020 10:48 PM

ADVERTISEMENT

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சா்வதேச விமானநிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் ரூ. 100 கோடி மதிப்புடைய தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சிலா் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் கேட்டு பண மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை மற்றும் என்ஐஏ சாா்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

‘ஸ்வப்னா சுரேஷுக்கு முதல்வா் அலுவலகத்தில் செல்வாக்கு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, அவரை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைக்கவும், ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த வழக்கில் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்த குற்றத்தில் தொடா்புடைய செல்வாக்கு மிக்க சிலரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. எனவே, அவருக்கு இப்போது ஜாமீன் வழங்கக் கூடாது’ என்று அமலாக்கத் துறை சாா்பில் வாதிடப்பட்டது.

அதுபோல, ‘ஸ்வப்னா சுரேஷ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், வழக்கு விசாரணையில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று என்.ஐ.ஏ. சாா்பில் விதிடப்பட்டது.

இந்த வாதங்களைக் கேட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

இதற்கு முன்னதாக, என்ஐஏ நீதிமன்றமும் பொருளாதார குற்றங்களுக்கான கூடுதல் சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றமும் ஏற்கெனவே இரு முறை ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT