இந்தியா

கேரள தங்கக் கடத்தல்: அமலாக்கத்துறை வழக்கில் ஸ்வப்னாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

21st Aug 2020 04:40 PM

ADVERTISEMENT

கேரள தங்கக் கடத்தல் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு கடந்த மாதம் வந்த பாா்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த சம்பவத்தை தேசியப் புலனாய்வு அமைப்பு, சுங்கத் துறை அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் தனித்தனியாக விசாரித்து வருகின்றன. 

கடத்தல் சம்பவத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வா் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளருமான எம்.சிவசங்கருக்குத் தொடா்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியானதால், அவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். வழக்கில் தொடா்புடைய முக்கிய நபா்களான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். அவா்களில், ஸ்வப்னா சுரேஷை அமலாக்கத் துறையினா் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா். 

இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் மனுதாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கின் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் ஜாமீன் அளிக்க முடியாது எனக் கூறி ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

ADVERTISEMENT

முன்னதாக ஸ்வப்னாவின் ஜாமீன் மனுவை கொச்சி நீதிமன்றமும் ஏற்கெனவே தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
 

Tags : kerala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT