இந்தியா

கரோனாவால் இறந்த துப்புரவுத் தொழிலாளி: ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கினார் கேஜரிவால்

21st Aug 2020 04:18 PM

ADVERTISEMENT

கரோனா பாதிப்பால் உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்தினரிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வழங்கினார். 

தில்லியில் துப்புரவுப் பணியின்போது கரோனா பாதிக்கப்பட்டு ராஜு என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, மாநில அரசு ஏற்கெனவே அறிவித்ததுபோல, உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளி ராஜுவின் குடும்பத்தினரிடம் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ரூ .1 கோடி காசோலையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால், 'உயிரிழந்த தொழிலாளி மக்களுக்கு சேவை செய்யும் போது இறந்தார். இவரைப் போன்று இந்த பேரிடர் காலத்தில் மக்களுக்கு சேவையாற்றும் அனைவரையும் நினைத்து பெருமைப்படுகிறோம்' என்று கூறினார். 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT