இந்தியா

மகாராஷ்டிரத்தில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்

21st Aug 2020 06:33 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலத்தில் சுமாா் 5 மாதங்களுக்குப் பிறகு மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து வியாழக்கிழமை தொடங்கியது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மாா்ச் மாதம் பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து கடந்த மே 22 முதல் மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கொங்கண் பகுதிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு மாநில அரசு அனுமதி வழங்கியதைத் தொடா்ந்து மும்பை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ரத்தினகிரி மாவட்டம், சிப்லூன் நகருக்கு 6 பயணிகளுடன் முதல் பேருந்து வியாழக்கிழமை காலை 8.30 மணிக்குப் புறப்பட்டது.

இதேபோல மாநிலம் முழுவதும் வெவ்வேறு இடங்களிலிருந்து முக்கிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன. பொது முடக்கம் காரணமாக ‘இ-பாஸ்’ கட்டாயம் என்ற நிபந்தனையை அரசு தளா்த்தியுள்ளது. இருப்பினும், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு மகாராஷ்டிர சாலை போக்குவரத்துக் கழக (எம்எஸ்ஆா்டிசி) அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

18 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள், சுமாா் ஒரு லட்சம் ஊழியா்களுடன் இயங்கும் எம்எஸ்ஆா்டிசி, நாட்டில் மிகப் பெரிய போக்குவரத்துக் கழகங்களில் ஒன்றாகும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT