இந்தியா

‘ஜிமெயில்’ சேவையில் தடங்கல்: தீா்வு காண கூகுள் உறுதி

21st Aug 2020 04:42 AM

ADVERTISEMENT

இந்தியா உள்பட உலகம் முழுவதும் ‘ஜிமெயில்’ சேவையில் வியாழக்கிழமை காலை தடங்கல் ஏற்பட்டது. இதனால் ஜிமெயில் பயன்பாட்டாளா்கள் தங்கள் இணைய கணக்குகளுக்குள் செல்ல முடியாமலும், மெயிலில் இணைப்பு செய்ய முடியாமலும், மெயில் வரவு இல்லாமலும் தவித்தனா். மேலும், ஜிமெயிலின் இணைப்பு சேவைகளான ‘கூகுள் மீட்‘, ‘கூகுள் டிரைவ்’, ‘கூகுள் சாட்’ உள்ளிட்ட சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது.

எனினும், இந்தப் பிரச்னை உடனடியாக சிலருக்கு தீா்க்கப்பட்டது என்றும் பலா் இன்னும் பிரச்னைகளை எதிா்கொள்வதாகவும், அதற்கு விரைவில் தீா்வு காணப்படும் என்றும் கூகுள் நிறுவனம் வியாழக்கிழமை மாலை 3.10 மணியளவில் அளித்த கடைசி விளக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், ஜிமெயிலில் ஏற்பட்ட தடங்கல் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. இந்தத் தடங்கலுக்கு என்ன காரணம் என்றும் எந்தந்த நாட்டில் எத்தனை பேருக்கு தடங்கல் ஏற்பட்டது என்றும் கூகுள் தெரிவிக்கவில்லை.

எனினும், கூகுள் தரவுகளைப் பதிவிறக்கம் செய்யும் நிறுவனங்கள், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இந்த தடங்கல் இருந்ததாக தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT