இந்தியா

குற்றவாளிகளுக்கு நூதன தண்டனை வழங்கிய இந்தூர் காவல்துறை

21st Aug 2020 03:12 PM

ADVERTISEMENT

மத்தியப்பிரதேசத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட நபர்களைப் பிடித்து பொதுமக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த இந்தூர் காவல்துறையினரின் காணொலி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் துவாகபுரி பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை திருடும் நோக்கில் மர்மநபர்கள் இருவர் கையில் கத்தியுடன் அவரை மிரட்டியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வழக்கில் தேடப்பட்ட இருவரை துவாகபுரி பகுதிக்கு அழைத்து வந்து பொதுமக்களின் முன்னிலையில் தோப்புக்கரணம் போட வைத்துள்ளனர். தொடர்ந்து தங்களது செயலுக்கு மண்டியிட்டு மன்னிப்பு கோர வைத்த சம்பவத்தின் காணொலி சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Tags : MadhyaPradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT