இந்தியா

10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த கச்சா எண்ணெய் இறக்குமதி

21st Aug 2020 06:25 PM

ADVERTISEMENT

கரோனா பொதுமுடக்கம் காரணமாக  எரிபொருள்களில் தேவை குறைந்ததால் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக உலகம் முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. பொதுமுடக்கம் காரணமாக வாகன போக்குவரத்து குறைந்துள்ளதால் எரிபொருள் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவு சரிந்துள்ளது.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த ஜூலை மாதத்தில் சுமார் 36.4% சரிந்து 12.34 மில்லியன்  டன்னாக உள்ளது என பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் (பிபிஏசி) தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்களின் ஏற்றுமதி ஜூலை மாதத்தில் 22.7% குறைந்து 3.92 மில்லியன் டன்னாக உள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவில் போக்குவரத்து மற்றும் நீர்ப்பாசன தேவைகளுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் டீசலுக்கான தேவை ஜூலை மாதத்தில் 19.3% குறைந்து 5.52 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : crude oil
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT