இந்தியா

தேர்தல்கள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

21st Aug 2020 04:35 PM

ADVERTISEMENT

கரோனா பேரிடர் காலத்தில் பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். வாக்குப்பதிவு மையத்துக்குள் கட்டாயமாக சானிடைசர், சோப்பு ஆகிய கைகளை சுத்தப்படுத்தும் பொருள்களை வைத்திருக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். 

தேர்தல் பணிகள் நடைபெறும் இடங்களில் வெப்ப பரிசோதனை கருவிகள் வைத்திருக்க வேண்டும்

ADVERTISEMENT

கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க மாநில, மாவட்ட மற்றும் தொகுதி வாரியாக சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். 

வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும்போது அலுவலர்கள் கையுறைகளை அணிந்திருக்க வேண்டும். வாக்குப்பதிவின்போது தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும். மேலும், தேர்தல் பணியாளர்களுக்கான அனைத்து வழிமுறைகளும் ஆன்லைன் அல்லது மொபைல் ஆப் மூலமாக வழங்கப்படும். 

தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பம், பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்துதல் ஆகியவற்றை ஆன்லைனில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வேட்புமனுத் தாக்கலின்போது இருவர் மட்டுமே வரவேண்டும். அதிகபட்சமாக இரு வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

பரப்புரைகளின்போது தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT