இந்தியா

சரத் பவாரின் இல்லத்தில் பணியாற்றும் 4 ஊழியர்களுக்கு கரோனா

21st Aug 2020 09:35 PM

ADVERTISEMENT

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் இல்லத்தில் பணியாற்றும் 4 ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 

மகாராஷ்டிர மாநிலம், பாராமதி பகுதியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் கோவிந்த் பாக் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் பணியாற்றும் 4 ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிப்பதாக புணே மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஒரு பெண் மற்றும் 3 ஆண்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் தொர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. எனினும், சரத்பவாரின் குடும்பத்தினர் யாருக்கும் இதுவரை கரோனா உறுதியாகவில்லை. 

அண்மையில் சரத் பவாரின் சில்வர் ஓக் இல்லத்தில் பணிபுரிந்த சமையலர் மற்றும் இரண்டு பாதுகாவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT