இந்தியா

ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் தீவிபத்து: பிரதமர் மோடி வருத்தம்

21st Aug 2020 06:05 PM

ADVERTISEMENT

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள நான்காவது யூனிட்டில் நேற்றிரவு (வியாழக்கிழமை) 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

விபத்து நடந்தபோது நான்காவது யூனிட்டில் 19 ஊழியர்கள் பணியில் இருந்தனர். அவர்களில் 10 பேர் சுரங்கப்பாதை வழியாக வெளியேறி தப்பினார்.  அதில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 9 பேரை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்திலிருந்து பாதுகாப்பு ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சிக்கிக்கொண்ட 9 பேரையும் தேடிக்கண்டுபிடிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இதனிடையே ஸ்ரீசைலம் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்திற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்து எதிர்பாராதது. விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்திற்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என நம்புகிறேன்'' இவ்வாறு பிரதமர் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT