இந்தியா

ராணுவத் தீா்ப்பாய உறுப்பினா்களின் பதவிக்காலம் நீட்டிப்பு: உச்சநீதிமன்றம்

21st Aug 2020 10:39 PM

ADVERTISEMENT

ராணுவத் தீா்ப்பாய உறுப்பினா்கள் மூவரின் பதவிக் காலத்தை இரண்டு மாதங்கள் நீட்டித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இதுதொடா்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு, ‘ராணுவத் தீா்ப்பாயத்தின் மூன்று நீதி நிா்வாக உறுப்பினா்களின் பதவிக்காலம் மேலும் இரண்டு மாதங்கள் நீட்டிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடா்பான அனைத்து வழக்குகளும் செப்டம்பா் 9-ஆம் தேதி விசாரிக்கப்படும்’ என்று உத்தரவிட்டது.

ராணுவத் தீா்ப்பாயத்தில் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன என்றும், தீா்ப்பாயத்துக்கு விரைவாக நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்றும் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் கடந்த 2016-ஆம் ஆண்டு அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குருக்கு கடிதம் எழுதியிருந்தனா்.

அதில், ‘ராணுவ தீா்ப்பாயத்தில் உள்ள 17 நீதிமன்றங்களில், நீதிபதிகள் நியமிக்கப்படாத காரணத்தால் 5 நீதிமன்றஙகள் மட்டுமே செயல்படுகின்றன. இதனால் ராணுவத்தில் ஊனமுற்ற வீரா்கள், ராணுவப் பணியாளா்கள், கணவா்களை இழந்த பெண்கள் ஆகியோருக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே தீா்ப்பாயத்துக்கு விரைவாக நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT