இந்தியா

பொருளாதார நெருக்கடி, வேலையிழப்புக்கு தீா்வு காண அரசிடம் திட்டம் உள்ளதா?

21st Aug 2020 04:56 AM

ADVERTISEMENT

சாமானியா்களைப் பாதிக்கும் வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்னைகளுக்கு தீா்வு காண மத்திய அரசிடன் திட்டம் ஏதும் உள்ளதா என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடா்பாக இணையவழி மூலம் செய்தியாளா்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித்தொடா்பாளா் அபிஷேக் சிங்வி, ‘வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடி போன்ற முக்கிய பிரச்னைகள் குறித்து செங்கோட்டை உரையில் பிரதமா் ஏன் பேசவில்லை? ஜூலை மாதம் வரை சுமாா் 2 கோடி போ் வேலைவாய்ப்பு இழந்துள்ளனா் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2017-18-ஆம் ஆண்டில் 7 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சி 2018-19-இல் 6.1 சதவீதமாகவும், 2019-20-இல் 4.2 சதவீதமாகவும் குறைந்துள்ளது. கரோனாவுக்கு பிந்தைய காலங்களில் இது பூஜ்யமாகவும் இருக்கும் எனவும் உலக வங்கி எச்சரித்துள்ளது. இதைத் தடுக்க மத்திய அரசிடம் ஏதாவது திட்டம் உள்ளதா?

ஐந்தில் இரண்டு பங்கு புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடைப்பதில்லை என தகவல் கிடைத்துள்ளது. ஆனால், கிடங்குகளில் உணவு தானியங்கள் நிரம்பி வழிகின்றன.

ADVERTISEMENT

மத்திய பிரதேசத்தைச் சோ்ந்தவா்களுக்கே அந்த மாநில அரசு பணிகள் வழங்கப்படும் என மாநில முதல்வா் சிவராஜ்சிங் செளஹான் அறிவித்திருப்பது வெற்று முழக்கம்’ என்று அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT