இந்தியா

தில்லியில் ஒரேநாளில் 1,250 பேருக்கு கரோனா தொற்று

21st Aug 2020 08:33 PM

ADVERTISEMENT

தில்லியில் இன்று புதிதாக 1,250 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,58,604-ஆக உயா்ந்துள்ளது. இதற்கிடையே, தில்லியில் மேலும் 13 போ் கரோனாவால் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,270 ஆக உயா்ந்துள்ளது. அதே சமயம் 1,082 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். 

இதனால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,42,908-ஆக அதிகரித்துள்ளது. தில்லியில் தற்போது 11,426 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா். 17,735 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு தில்லி சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 23-ஆம் தேதி தில்லியில் ஒரே நாளில் அதிக அளவாக 3,947 போ் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதன்பிறகு நோய் பாதிப்பு அந்த அதிகபட்ச அளவை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT