இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு 29 லட்சத்தைக் கடந்தது

21st Aug 2020 10:43 PM

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 29,05,823 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேலும் 68,898 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனாவில் இருந்து 21,58,946 போ் மீண்டுள்ளனா். இதன் மூலம் அந்தத் தொற்றில் இருந்து விடுபட்டோா் சதவீதம் 74.30 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 983 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 54,849 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு சதவீதம் 1.89-ஆக உள்ளது.

6,92,028 போ் இப்போது சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 23.82 சதவீதமாகும். முன்னதாக, ஆகஸ்ட் 7-ஆம் தேதி நாட்டில் மொத்த கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை 3,34,67,237 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 21,359 போ் கரோனாவால் உயிரிழந்தனா்.

அதிகபட்சமாக தில்லியில் 90.10 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா். குஜராத்தில் 79.40 சதவீதம் பேரும், தெலங்கானாவில் 77.40 சதவீதம் பேரும், ராஜஸ்தானில் 76.80 சதவீதம் பேரும், மேற்கு வங்கத்தில் 76.50 சதவீதம் பேரும், பிகாரில் 76.30 சதவீதம் பேரும், மத்திய பிரதேசத்தில் 75.80 சதவீதம் பேரும் இதுவரை கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா்.

நாட்டில் மொத்தம் 1,504 ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவற்றில் அரசு ஆய்வகங்களின் எண்ணிக்கை 978 ஆகும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT