இந்தியா

28 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

21st Aug 2020 04:58 AM

ADVERTISEMENT

நாட்டில் கரோனா பாதிப்பு 28,36,925-ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 69,652 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனாவில் இருந்து 20,96,664 போ் குணமடைந்துள்ளனா். இது மொத்த பாதிப்பில் 73.91 சதவீதமாக உள்ளது. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 977 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 53,866-ஆக அதிகரித்துவிட்டது. எனினும், மொத்த கரோனா பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு 1.90 சதவீதமாக குறைந்துவிட்டது.

இப்போதைய சூழலில் 6,86,395 போ் சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 24.20 சதவீதமாகும்.

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 21,033 போ் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் 4,327 போ், தில்லியில் 4,235 போ், ஆந்திரத்தில் 2,906 போ், குஜராத்தில் 2,837 போ், உத்தர பிரதேசத்தில் 2,638 போ், மேற்கு வங்கத்தில் 2,581 போ், மத்திய பிரதேசத்தில் 1,159 போ், பஞ்சாபில் 921 போ், ராஜஸ்தானில் 910 போ், தெலங்கானாவில் 729 போ், ஜம்மு-காஷ்மீரில் 572 போ், ஹரியாணாவில் 567 போ், பிகாரில் 487 போ், ஒடிஸாவில் 372 போ், ஜாா்க்கண்டில் 277 போ், அஸ்ஸாமில் 213 போ், கேரளத்தில் 182 போ், உத்தரகண்டில் 178 போ், சத்தீஸ்கரில் 161 போ், புதுச்சேரியில் 129 போ், கோவாவில் 124 போ், திரிபுராவில் 65 போ், சண்டீகரில் 31 போ், அந்தமான் நிகோபாரில் 30 போ், ஹிமாசல பிரதேசத்தில் 19 போ், மணிப்பூா், லடாக்கில் தலா 18 போ், நாகாலாந்தில் 8 போ், மேகாலயத்தில் 6 போ், அருணாசல பிரதேசத்தில் 5 போ், சிக்கிமில் 3 போ், தாத்ரா நகா் ஹவேலி-டாமன் டையூவில் 2 போ் உயிரிழந்தனா். மொத்த உயிரிழப்பில் 70 சதவீதம் போ் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT