இந்தியா

ஆந்திரத்தில் ஒரே நாளில் 9,544 பேருக்கு கரோனா உறுதி; மேலும் 91 பேர் பலி

21st Aug 2020 06:14 PM

ADVERTISEMENT

ஆந்திரத்தில் ஒரே நாளில் 9,544 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆந்திர மாநிலத்தில் கடந்தி சில நாட்களாகவே மிக அதிக எண்ணிக்கையில் கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9,544 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதில், அதிகபட்சமாக கிழக்கு கோதாவரியில் 1312 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,34,940 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 91 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கையானது 3,092 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 87,803 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 8,827 பேர் மீண்ட நிலையில் ஒட்டுமொத்தமாக இதுவரை 2,44,045 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரத்து 10  பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : Corona cases
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT