இந்தியா

அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 113ஐ எட்டியது, 56.9 லட்சம் பேர் பாதிப்பு

21st Aug 2020 01:33 PM

ADVERTISEMENT

 

அசாமில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிண்கை 113ஆக உயர்ந்துள்ளது. 

அசாமின் 30 மாவட்டங்களில் 56,91,694 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மொத்தம் 626 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட 1,56,874 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

அசாமின் எட்டு இடங்களில் தேசிய பேரிடர்  மீட்பு படைகளும் (என்.டி.ஆர்.எஃப்), 40 வெவ்வேறு இடங்களில் மாநில பேரிடர் மீட்புப் படைகளும் (எஸ்.டி.ஆர்.எஃப்) நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 384 படகுகள் உதவிக்காக அனுப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : floods
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT