இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

21st Aug 2020 03:20 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர்  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். எல்லைப்பகுதியில் உள்ள மான்கோட் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனை அடுத்து சக ராணுவ வீரர்கள் நிகழ்விடத்திற்கு சென்று பார்க்கும்போது ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதனைசெய்த மருத்துவர்கள் ராணுவ வீரர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

ADVERTISEMENT

Tags : jammukashmir
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT