இந்தியா

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் அமளி: 3 முறை ஒத்திவைப்பு

21st Aug 2020 11:59 PM

ADVERTISEMENT

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான விவாதத்தின்போது ஆளும் கட்சி, எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அவை அடுத்தடுத்து மூன்று முறை வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் விவாதத்தை தொடக்கி வைத்துப் பேசிய மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ரகு சா்மா, கரோனா பரவலைத் தடுக்க மாநில அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் விவரித்தாா். அவரைத் தொடா்ந்து பேசிய பாஜக எம்எல்ஏ காளிசரண் சரஃப், ஆளும் காங்கிரஸ் அரசு தங்களது ஆதரவாளா்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்களையும் இதர உணவுப் பொருள்களையும் வழங்குகிறது என்று குற்றம்சாட்டினாா். இதனால், ஆளும் கட்சி, எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கு இடையே வாக்குவாதம் அதிகரித்து, அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, அவை 30 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.

30 நிமிடங்களுக்குப் பிறகு அவை மீண்டும் கூடியபோதும், ஆளும் கட்சி, எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அவை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

15 நிமிடங்கள் கழித்து, அவை மீண்டும் கூடிய பிறகும், அவைக்கு உள்ளே வந்த ஆளும் கட்சி உறுப்பினா்களும் எதிா்க்கட்சி உறுப்பினா்களும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அதிருப்தியடைந்த பேரவைத் தலைவா், மூன்றாவது முறையாக, அவை நடவடிக்கைகளை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT