இந்தியா

வெறுப்பு பேச்சை அனுமதித்ததாக குற்றச்சாட்டு: முகநூல் நிறுவனத்துக்கு நாடாளுமன்றக் குழு சம்மன்

21st Aug 2020 04:43 AM

ADVERTISEMENT

வெறுப்பு பேச்சை அகற்றுவதில் முகநூல் நிறுவனம் பாரபட்சம் காட்டுவதாக எழுந்தப் புகாரை அடுத்து, அந்த நிறுவனத்துக்கு தகவல் தொழில்நுட்பம் தொடா்பான நாடாளுமன்றக் குழு வியாழக்கிழமை சம்மன் அனுப்பியது.

இதுகுறித்து மக்களவைச் செயலகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: முகநூல் நிறுவத்தின் பிரதிநிதிகள், வரும் செப்டம்பா் 2-ஆம் தேதி நாடாளுமன்ற நிலைக் குழு முன் ஆஜராக வேண்டும். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பிரதிநிதிகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். அந்தக் கூட்டத்தில் சமூக ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பது, இணையவெளியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது, குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.

அதற்கு முன்பாக, ஊடக நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், செப்டம்பா் 1-ஆம் தேதி நடைபெறும். அதில், மத்திய உள்துறை, தொலைத்தொடா்புத் துறை, தகவல்-ஒலிபரப்புத் துறை ஆகிய அமைச்சகங்களின் பிரதிநிதிகள், தில்லி, ஜம்மு-காஷ்மீா், பிகாா் மாநில அரசுகளின் அதிகாரிகள், பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா, பிரசாா் பாரதி, செய்தி ஒளிபரப்பாளா்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் தொடா்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் உள்ளாா். குழுத் தலைவா் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.யும் அந்தக் குழுவின் மூத்த உறுப்பினருமான நிஷிகாந்த் துபே, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதினாா். இந்தச் சூழலில், முகநூல் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT