இந்தியா

சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பு: மகளைத் தீயிட்ட தாயும் பலி

21st Aug 2020 01:05 PM

ADVERTISEMENT

தெலங்கானா மாநிலத்தில் வேறு சாதி ஆணை காதலித்ததை எதிர்த்து தனது மகளை பெட்ரோல் ஊற்றி எரித்த தாய், மகளுடன் சேர்ந்து பலியான சம்பவம் நடந்துள்ளது.

அறிவியல் உலகில் பல்வேறு மாற்றங்கள் நடந்தாலும் சாதாரண மக்களின் மனநிலையில் சாதி குறித்து எவ்வித மாற்றமும் நிகழவில்லை என்பதற்கு உதாரணமான சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள ஷாட்நகரில் தனது கணவருடன் வசித்து வருபவர் சந்திரகலா. இவருக்கு ஸ்ரவதி எனும் மகள் உள்ளார். ஸ்ரவதி தான் வசிக்கும் பகுதியிலேயே வேறு சாதியைச் சேர்ந்த ஆணை காதலித்து வந்துள்ளதாகத் தெரிகிறது. இதனை அறிந்த ஸ்ரவதியின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று ஸ்ரவதி மற்றும் அவரது பெற்றோருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஸ்ரவதியின்  தந்தை ஸ்ரவதிக்கு மண்ணெண்ணெய் பாட்டிலைக் கொடுத்து, காதலனை மறந்துவிடவோ அல்லது தன்னைக் கொல்லவோ செய்யுமாறு கேட்டுள்ளார். இதனை கவனித்துக் கொண்டிருந்த சந்திரகலா தனது கணவரிடமிருந்து மண்ணெண்ணெயைப் பறித்து, ஸ்ரவந்தி மீது ஊற்றி தீ வைத்தார். ஆனால், எதிர்பாராத விதமாக தாய் சந்திரகலாவும் தீப்பிடித்துக் கொண்டார்.

ADVERTISEMENT

தொடர்ந்து பலத்த தீக்காயங்களுக்குள்ளான இருவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் 80 சதவிகித காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த தாயும் மகளும் புதன்கிழமை உயிரிழந்தனர்.

சந்தேகத்திற்கிடமான இந்த மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : telangana
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT