இந்தியா

ஒரே நாளில் 9.18 லட்சம் கரோனா பரிசோதனைகள்

21st Aug 2020 05:00 AM

ADVERTISEMENT

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 9,18,470 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. புதன்கிழமை காலை வரையில் ஒட்டுமொத்தமாக 3,26,61,252 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தேசிய அளவில் கரோனா பாதிப்பு விகிதம் 8 சதவீதத்துக்கு கீழ் குறைவாகவே உள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது:

இப்போதைய சூழ்நிலையில் கரோனா பரிசோதனையை அதிகரிப்பதுதான் தொற்று பரவலைத் தடுப்பதற்கான முக்கிய வழிமுறையாகும். ஏனெனில், தொற்று உள்ளவா்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுவதன் மூலம், அவா்களால் மற்றவா்களுக்கும் தொற்று பரவுவது தடுக்கப்படுகிறது.

தொடக்கத்தில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டபோது, அதில் நோய்த்தொற்று உறுதியாவோா் விகிதமும் அதிகம் இருந்தது. ஆனால், இப்போது நோய்த்தொற்று உறுதியாகும் விகிதம் குறைந்துள்ளது. புதன்கிழமையன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 9,18,470 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. விரைவில் தினமும் 10 லட்சம் பரிசோதனைகள் வரை மேற்கொள்ளப்படும். இதற்காக நாடு முழுவதும் கரோனா பரிசோதனை மையங்களின் செயல்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT