இந்தியா

கேரளத்தில் புதிதாக 1,983 பேருக்கு கரோனா; 12 பேர் பலி

21st Aug 2020 07:09 PM

ADVERTISEMENT

கேரளத்தில் புதிதாக 1,983 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கேரளத்தில் ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுகிறது. அந்த வவையில் இன்று மேலும் 1,983 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அவர்களில் 64 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 99 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். இதனால் மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 54,182 ஆக உயர்ந்துள்ளது.  இன்று மேலும் 12 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் மாநிலத்தில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 1,419 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,247 ஆக உள்ளது. தற்போது வரை 18,673 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT